செய்தி:
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம், காவல் துறையுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு டீக்கடையில் இருந்து தேர்தல் அதிகாரிகள் ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆம்னி பேருந்தின் மேற்கூரையில் உள்ள 5 பைகளில் 1000 ரூபாய் நோட்டுக்கட்டுகள் இருந்தது. இதில், மொத்தம் 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கண்டுபடிக்கப்பட்டது. இதற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணத்தையும், பேருந்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வாகன சோதனையில் ஒரே நேரத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடதக்கது.
ஏனோ தானோ:
கந்தசாமி படம் பார்த்து இதை செஞ்சிருப்பாங்களோ??? அப்ப மூமைத்கான்?? இருந்தாலும் டீ கடையில பணப்பட்டுவாடா எல்லாம் புதுசா தான் இருக்கு....
செய்தி:
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் தனக்கு பிரச்சினை இருந்ததாக டாடா கூறியுள்ளார்.
ஏனோ தானோ:
எலி சிங்கத்தை மிரட்டிப் பார்த்துச்சாம்.. பின்ன சிங்கத்துக்கு கோபம் வராதா என்ன? "டாடா" அண்ணே! எதுக்கும் இன்னொரு தடவை நீரா ராடியாகிட்ட சொல்லி வைங்க... பயபுள்ள மீண்டும் அமைச்சராகி உங்கள மிரட்ட போகுது..
செய்தி:
கூட்டணி அமைத்தாலும் இதுவரை ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜய்காந்தும் நாளை கோவையில் ஒரே இடத்தில் கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஏனோ தானோ:
சினிமாவில் தான் ஒன்னா நடிக்கற வாய்ப்பு இல்லை. மேடையிலாவது ஒன்னா நடிக்கலாம்னா விடமாட்டாங்க போல!!!
எதிர் கட்சிகள் எழுப்பிய கேள்விகளை தொடர்ந்து இந்த நாடகத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியவர் யாருங்க.. எல்லாம் நம்ம சோ சார் தான்...
செய்தி:
முதல்வர் சுற்றுப்பயணம் செல்லும்போதோ, பொதுக் கூட்டங்களுக்குச் செல்லும்போதோ கெசட்டட் அதிகாரிகள் யாரும் உடன் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து முதல்வருடன் இருப்பதற்கு இடையூறாய் இருந்த செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் சண்முகநாதன்.
ஏனோ தானோ:
அரசிற்காக (தாத்தாவிற்காக) தன் கவர்மெண்ட் உத்யோகத்தினை கூட கடைசியாக நம்ம சண்முகநாதன் துறந்திட்டாரு??
ஆமாம் ஆமாம் வேலையை விட முடியாதுன்னு சொன்னா (முன்னே ஒரு வாட்டி நம்ம சண்முகநாதன் தாத்தாவை விட்டு பிரிந்து போயிருந்தப்போ.. நம்ம தாத்தா "அவன் வராறான்னா இல்லையான்னு கேளுய்யா...இல்லைன்னா பைலை திருடிட்டு போயிட்டான்னு அவன் மேல ஒரு பொய் கேஸை போட்டு உள்ள தள்ளிடுவேன்னு சொல்லு) அப்படி சொன்னதை அதுக்குள்ளய்யா நம்ம சண்முகநாதன் மறந்திருப்பாரா என்ன?"
செய்தி:
அதிக கமிசன் தருவதாக கூறி, மாருதி உள்ளிட்ட உள்நாட்டு கார் நிறுவனங்களின் டீலர்களுக்கு வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வலைவீசி வருகின்றன. நாட்டின் மாநகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பெரிய டீலர்களுக்கு அதிக கமிசன் தருவதாகவும், கார்களுக்கு பணம் திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்து தருவதாக ஆசை வார்த்தை கூறுவதால், டீலர்களும் பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.
ஏனோ தானோ:
இப்படி வெளி நாட்டுக்காரன் போடற எலும்பு துண்டுகளுக்கு நாம அலையறது 200 வருஷமா நடக்கிறது. எவன் செத்தா என்ன? எவன் வாழ்ந்தா என்ன? நாம நல்லா இருக்கணும் அதான் நம்ம பாலிசி !
செய்தி:
பாவம், உங்க ஊர் பையண்ணே என்று விஜயகாந்த்திடம் வடிவேலுவை அறிமுகப்படுத்தி அவருடன் நடிக்க வைத்தேன்.ஆனால் இன்று வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைத்துள்ளார் வடிவேலு என்று சாடியுள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்.
ஏனோ தானோ:
அன்னைக்கு விஜயகாந்த்தோட நடிச்சேன்னு பெருமைப்பட்டேன்.. இன்னைக்கு விஜயகாந்த்தை எதிர்த்தேன்னு பெருமைபடறேன்...அவ்வளவு தான்.. அன்னைக்கு உங்க நேரம் நல்லாயிருந்தது! நான் வந்து உங்க கிட்ட சான்ஸ் கேட்டேன். ஆனால் இன்னைக்கு என் நேரம் நல்லாயிருக்கு! நீங்க வந்து எங்கிட்ட சான்ஸ் கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன்.. இப்ப நீங்க ஒரு டம்மி பீஸ்சு....
ஏனோ தானோ:
போங்க சார் போங்க.. போயி உங்க புள்ளக் குட்டிங்கள படிக்க வையுங்க....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நீங்க ஏனோ தானோன்னு கருத்தை சொல்லுங்க....ஆனா பதில் ஏனோ தானோன்னு இருக்காதுங்க....
உங்கள் பொன்னான கருத்துக்களை எப்பொழுதும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.