திங்கள், 2 மே, 2011

இருந்தாலும் உன்னை போய் நான்






நீ என்னை சுட்டெரிப்பதால்
பாலை வெயில் நீ !


நீ என்னை உறையவைப்பதால்
ஆர்டிக் கடுங்குளிர் நீ !


நீ என்னை சுற்றியடிப்பதால்
சுழலும் சூறாவளி நீ !


நீ என்னை கலங்கடிப்பதால்
புரட்டும் பூகம்பம் நீ !


நீ என்னை தீஞ்சொல்வதால்
அனற்றும் எரிமலை நீ !


நீ என்னை அழிப்பதால்
இரக்கமற்ற சுனாமி நீ !


நீ என் மீது உமிழ்வதால்
காட்டாற்று வெள்ளம் நீ !


இருந்தாலும் உன்னை போய் நான்


மஞ்சல் வெயில் என்றேன் !
மார்கழி பனி என்றேன் !


தென்றல் காற்று என்றேன் !
தாங்கும் பசும்பூமி என்றேன் !


ஒளிதரும் விளக்கு என்றேன் !
வருடிடும் அலை என்றேன் !


நனைக்கும் நீரோடை என்றேன் !


இத்தனை தீங்கு நீ செய்தாலும் உன்னை
ஏனோ ஒருத்தல் செய்யவில்லை நான் ?


வள்ளுவன் குறளின் இலக்கணமாய்
வாழ்ந்து விட்டேனடி ஒரு முறையேனும்!

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

'கோ' - திரைப் பார்வை

 குமார் ஜெயராமன் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியீட்டில் ஜீவா, அஜ்மல், கார்த்திகா (ராதா மகள்), பியா, பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாச ராவ் நடிப்பில் வெளிவந்திருக்கிற மற்றொரு வெற்றிப்படம் தான் இந்த கோ.

நான் கே.வி. ஆனந்த் படம் பார்க்க போறேன் என்றவுடன், கண்களுக்கு விருந்து இருக்கும் என்று தான் நம்பி போனேன். என்னுடைய எதிர்பார்ப்பு நிச்சயம் வீண் போகவில்லை. படத்தின் திரைக்கதைக்கும், அதை படமாக்கியிருக்கிற விதத்திற்கும் முதலில் என் சார்பாக கே.வி. ஆனந்த் சாருக்கு ஒரு பூங்கொத்து கொடுத்து விடுகிறேன்.

டைட்டில் போடும் போதே கே.வி. ஆனந்த்தோட போட்டோகிராபி இன்ட்ரெஸ்ட்டை நம்மால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. டைட்டில்லேயே எல்லா அரிய புகைப்படங்களையும் சிலைட் ஷோவாக போட்டு பேர் போட்டு இருப்பார். டைட்டில்லே இருந்தே பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம் உருவாக்கி அங்கே இருந்து நம்மளை படம் பார்க்க உட்கார வைத்திருக்கிறார்.

'கோ' படம் ஒரு 'அரசியல் திரில்லர்' படம். ஒரு வங்கிக் கொள்ளையிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. நுட்பான காட்சியமைப்புகள் மற்றும் கொள்ளையடிக்கும் விதம் இதிலிருந்தே படத்திற்கு ஒரு பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. தின அஞ்சல் புகைப்படக்காரரான 'ஜீவா' கொள்ளையடித்துவிட்டு தப்பிக்கும் கும்பலை விரட்டி விரட்டி போட்டோ எடுத்து தள்ளுகிறார். அந்த போட்டாக்களை போலிசிடம் கொடுத்து, போலிசும் அந்த கொள்ளை கும்பலை உடனடியாக பிடித்துவிடுகிறது. (இதெல்லாம் சினிமாவில மட்டும் தான் சாத்தியம்!)  இங்கிருந்து படம் மெல்ல அரசியலை நோக்கி நகர்ந்து தேர்தலை மையமாக வைத்து யார் அடுத்த 'கோ'(அரசன்) யார் என்பதை சொல்வது தான் இந்த 'கோ'.

'ஜீவா' வழக்கமான தமிழ் ஹீரோ மாதிரி அரசியல் வியாதிகளுக்கு எதிராக சவால் விட்டு பஞ்ச் டயலாக் பேசி அவங்களை எல்லாம் அழிப்பது போல் இல்லாமல், அதிக வசனம் பேசாமல், தன் நடிப்பின் மூலமே மற்றவர்களை பேச வைத்திருக்கிறார்.  அஜ்மல்லுடன் ஜீவா அடிக்கடி கண்களாலேயே பேசிக் கொள்வது நல்ல காட்சியமைப்புகள்.  ஜீவாவோட எல்லா திறமைகளையும் ஓரளவிற்கு அங்கங்க இயக்குநர் பயன்படுத்தியிருக்கிறார். ஜீவாவிற்கு ஏற்ற கதாபாத்திரம் தான். ரொம்ப சிறப்பாக எல்லா பிரேமிலும் செய்திருக்கிறார். ஜீவாவை நல்லா அழகாகவே காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இயக்குநர் விருப்படி ஒழுங்காக நடிச்சாலே படம் பாதி வெற்றியடைந்துவிடும். அந்த சூட்சமம் புரியாம 'தமன்னா' தான் வேண்டும்ன்னு அடம் பிடிச்சி 'பொம்பளை போதையில' ஒரு நல்ல படத்தை இழந்துட்டாரு 'சிம்பு'. சிம்புக்கு வடை போச்சு. இருந்தாலும் இது சிம்புக்கு ரொம்ப ஓவர் தான்.


கார்த்திகாவுக்கு நல்ல அறிமுக காட்சி தான். ஜீவாவை திருடன் என்று தவறாக நினைத்து அந்த கொள்ளை கும்பல் துரத்திக் கொண்டிருக்கும் போது ஜீவாவை கீழே தள்ளி விட்டு பிடித்து கொடுக்கும் அந்த காட்சி. படம் முழுக்க ஓரளவுக்கு வரும் கதாபாத்திரமாகத் தான் இவருக்கு முதல் படம் அமைந்திருக்கு. நல்ல கண்கள், நல்ல உயரம் (இதே மைனஸ்சும் கூட) அழகாகத் தான் இருக்காங்க. இருந்தாலும் நிறைய பேருக்கு இன்னும் ராதாவைத் தான் பிடித்திருக்கு போல. தியேட்டர்களில் ராதாவை பாராட்டுவது காதில் விழத்தான் செய்தது. பாடல் காட்சிகளில் நன்றாக காட்சியளிக்கிறார். கண்களாலேயே பேசும் இடங்கள் எல்லாம் நடிப்பு மிளிர்கிறது. பார்க்கலாம் போக போகத் தான் தெரியும் இவரு அம்மா அளவிற்கு சாதிப்பரான்னு?


துருத்துரு பெண்ணாக ஜீவாவின் நண்பியாக 'பியா' வருகிறார். ஜீவா, பியா, கார்த்திகா சேர்ந்து அடிக்கும் கும்மி ரசிக்கும்படியாக உள்ளது. அப்பாவியான பியா இறந்து போகும் போது நமக்குள்ளும் வருத்தம் ஏற்படுகிறது. பியா நல்ல தேர்வு.

ஒளிப்பதிவு ஒவ்வொரு பிரேமிலும் 'சபாஷ்' சொல்ல வைக்கிறது. பாடல் காட்சிகளாகட்டும், சண்டை காட்சிகளாகட்டும் எல்லாமே அருமை ரகம். சொல்ல போனால் நான் பல ஆங்கிலப் படங்களில் பார்த்து ரசித்த தரம், இந்த 'கோ' படத்தின் ஒளிப்பதிவில் உள்ளது. துப்பாக்கி தோட்டா தெரிக்கும் காட்சிகள், ஆரம்பத்தில் வரும் துரத்தல் காட்சிகள், குண்டுவெடிப்பு காட்சிகள், வென்பனியே என வரும் சீனாவில் படமாக்கப்பட்ட பாடல் காட்சிகள், 'என்னமோ ஏதோ' பாடலின் ஒளிப்பதிவு கண்களுக்கு மிகச் சிறந்த விருந்தாகவே உள்ளது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட்டுக்கு இன்னொரு ஸ்பெஷல் பூங்கொத்து.


மதன் கார்க்கியின் பாடல் வரிகள் உள்ளத்தை 'என்னமோ ஏதோ' செய்யத்தான் செய்கிறது. ஹாரிஸின் இசையும் படத்திற்கு ஒரு பலம் என்று தான் சொல்ல வேண்டும். பாடல்களில் என்னமோ ஏதோ நல்ல அருமையான மனதை வருடும் இசை. மற்றவை 'அமளி துமளி', 'வென்பனி' ஆகியவை ஹாரிஸின் வழக்கமான ரகங்களாகும். பின்னணி இசையில் தன் முன் படங்களை ஞாபகப் படுத்தினாலும் தன் முந்தைய படங்களில் இருந்த இரைச்சலான இசையை இதில் தராதது ஹாரிசுக்கு பிளஸ்.

இந்த படத்திற்கு 'அஜ்மலின் கேரக்டர்' தான் படத்திற்கு உயிரோட்டம் ஆகும். நாளைய இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அரசியலுக்கு வாருங்கள் என்கிற சாரம்சத்தை வைத்து இன்றைய ஊழல் அரசியல் வியாதிகளை எதிர்த்து குரல் கொடுக்கும் இளைஞனாக அஜ்மல். இளைஞர்கள் நினைத்தால் எந்த அரசியல் சக்தியையும் வீழ்த்த முடியும் என்பதை நன்றாக காட்டியிருக்கிறார்கள். தீப்பிடிச்ச குடிசைகளை அணைச்சி குழந்தையை காப்பாத்துறது, ஆளும்கட்சி பேச்சாளருக்கு நெஞ்சுவலி வந்த சமயத்தில் கட்சி பேதமில்லாமல் அவருக்கு முதலுதவி செய்து அவரது நண்பர் காப்பாத்துறது, சிறகுகள் கட்சி தலைவரை அடிச்சி உதைச்சி பிரச்சாரம் பண்ணவிடமா அடிவாங்குகிற காட்சிகள், பாம் வெடித்தபிறகு தன் சிறகு நண்பர்களை தேடுதல் போன்ற காட்சிகள் எல்லாம் நல்லா ரீச் ஆகும் படி செய்திருக்கிறார் அஜ்மல். முதல்வராக அமர்ந்தது முதல் க்ளைமாக்ஸ் காட்சிகள் வரை வித்தியாசமான 'வசந்தனா' வாழ்ந்து காட்டியிருக்கிறார் அஜ்மல்.


தமிழக முதல்வராக பிரகாஷ்ராஜின் நடிப்பு பிரமாதம். அவர் வரும் காட்சிகள் அவருக்கே உரிய பாணியில் படம் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. குறிப்பாக கார்த்திகா, ஜீவாவை கார்ல ஏறச் சொல்லி பேட்டி கொடுக்கிறேன் என்ற பெயரில் கார்த்திகாவை வறுத்தெடுப்பதும், பத்திரிக்கையில் 'வசந்தன் நடந்துதான் வறாரு' எழுதியிருக்கிற 'நான் நடந்தா என்னாகும்ன்னு பார்க்கிறீயா' என்று தீடீரென்று ரோட்டில் இறங்கி நடப்பதும், செருப்பால அடிக்கற காட்சிகள் ஆகியவை நல்ல அரசியல் நெடி,  'அரசியல்ல எங்க முகத்தை காண்பிக்கனும், எங்க முதுகைக் காண்பிக்கணும்' என்ற வசனம் பேசும் போது 'நிஜ' முதல்வராக தெரியாரு.

'கோட்டா சீனிவாசராவ்' அருமையான அளவான நடிப்பு. கதாபாத்திரத்திற்கு கச்சிதமான பொருத்தம். இன்றைய அரசியல் வியாதிகள் மறைமுகமா செய்கிற அத்தனை காட்சிகளையும் நிஜமாக பிரதிபலித்திருக்கிறார் இந்த கோட்டா சீனிவாச ராவ். குழந்தை தூக்கி பேரை வைச்சிட்டு, தூக்கின கையை டெட்டால் போட்டு கழுவுறது, சின்ன பெண்ணை கல்யாணம் பண்றதா நியூஸ் போட்டா கார்த்திகாவை மிரட்டறது, தேர்தல் தோல்வியடைந்த பிறகு, எந்த பட்டனை அமுக்கினாலும் ஒரே கட்சிக்கே ஓட்டு விழற மாதிரி மின்னணு இயந்திரங்களை செட் பண்ணியிருக்காங்கன்னு பேட்டி கொடுக்கிறது, ஆளும் கட்சிக்காரன் சாவுக்கு போய் பணம் கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறது, பாம் வெடிச்ச இடத்தை பார்வையிட்ட பிறகு, 'பாம் வைச்சது யாருன்னு உங்களுக்கும் தெரியும், பார்த்தீங்களா அவரு வந்தாரா? இதிலெருந்து என்ன தெரியுது' என்று சொல்லும் காட்சிகள் எல்லாம் நல்ல டைமிங்.

காசுக் கொடுத்துவிட்டு குழந்தை மேல சத்தியம் வாங்கிக்கிட்டு வோட்டை மாத்தி போடக் கூடாதுன்னு சொல்லும் போது, காசு வாங்குகிற ஒவ்வொரு வாக்காளனும் தான் வெட்கப்பட வேண்டிய காட்சி.

'தம்மாத்துண்டு பிளாஸ்திரி போட்டுவிட்டுட்டு உண்மையை கறந்துடலாம்ன்னு பார்க்கிறீயா? உன் பத்திரிக்கைக் காரன் புத்தியை காட்டிட்டே இல்ல.. ஆமாம்டா நீங்க செத்த போணத்தைக் கூட எழுப்பி நியூஸ் வாங்கிடுவங்கைய்யான்னு சொல்றது',
உங்களுக்கெல்லாம் அரசியல் வாதிகள் எல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்ற மாதிரி, உங்க கூட்டத்துக்கு நீங்களும் ஒரு காரணம் சொல்லுவீங்கன்னு சொல்ற இடம்
போஸ் ஜீவா உரையாடலும், அதைத் தொடர்ந்து வருகிற பிளாஷ் பேக் காட்சிகளும் நிறைவான அளவோடு வைத்தமைக்கு நன்றி. 

ஒளிப்பதிவிற்கும் லோகேஷன்களுக்கும் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கே.வி. ஆனந்த். ஷங்கருடன் பணியாற்றியதாலோ என்னவோ பாடல் காட்சிகளுக்கு இவரும் தனி முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு பாடல்களையும் அருமையான லோகேஷன்களில் படமாக்கியிருக்கும் விதம் பாராட்ட வைக்கிறது. அதைவிட முக்கியம் கொஞ்ச வருடங்களாகவே பாஸ்ட் எடிட்டிங்ன்னு எவன் கண்டுபிடிச்சான்னு தெரியல, ஒரு காட்சி ஒரு பிரேமுல தான் வரும் அடுத்த பிரேமுல வேற காட்சின்னு இஷ்டத்துக்கு கட் பண்ணி ஒரு காட்சியை கூட மனசில பதிய விடமாட்டேங்கிறாங்க. "கேட்டா" இப்பத்தைய டிரெண்ட்ன்னு சொல்லிக்கிறாங்க. இத்தனைக்கும் ரொம்ப சிரமப்பட்டு, சூப்பரான லோகேஷன்ல எடுத்திருப்பாங்க இருந்தும் அதை நிறைவாக ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்க மாட்டாங்க. ஆனால் கே.வி. ஆனந்த் அதில்ல கவனம் செலுத்தியிருக்கிறது பாடல் காட்சிகளை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு லோகேஷனும் படம் பார்த்துவிட்டு வந்தபிறகும் கண்களில் நிறைந்து இருக்கும் படி அளவான எடிட்டிங் செய்திருப்பதற்கு ரொம்ப நன்றி. படத்தில அஜ்மல் வர இடத்தில எல்லாம் ஜீவா எப்படி ஆஜாராகுறாரு அப்படிங்கிற கேள்வியை அந்த இடத்திலேயே பத்திரிக்கையாளர் மூலமாக கேட்க வைத்து ரசிகர்கள் வாயையடைத்துவிடுவது, தன்னுடைய முதல் படமான 'அயனை' பியாவை வைத்து கிண்டல் செய்துக் கொள்வது எல்லாம் கே.வி. ஆனந்த்தின் புத்திசாலித்தனமான காட்சிகள். படத்தின் விறுவிறுப்பு கடைசிக் காட்சி வரை குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளார். சுபாவின் கதைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார். 'வென்பனியே' பாடல் வரும் இடம் படத்திற்கு துளியும் ஒட்டவில்லை. இருந்தாலும் படமாக்க்யிருக்கும் விதத்தினால் அந்த குறையை பெரிதாக சொல்ல முடியாது.

'கமர்ஸியல்' டைரக்டருக்கான முத்திரையை மீண்டும் பதித்திருக்கிறார் கே.வி.ஆனந்த்.
நமக்கெதுக்கு அரசியல்ன்னு பேசவே ஒதுங்குகிற பலர் இருக்கும் போது, படமாக்க எவ்வளவோ விஷயம் இருந்த போதும் தைரியமாக 'அரசியல் கதையை' சொல்லியிருக்கிற கே.வி. ஆனந்திற்கு இன்னொரு 'சபாஷ்'. 


'கோ' விற்காக உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கலாம்.

புதன், 20 ஏப்ரல், 2011

கன்னியாய் இருப்பதன் மர்மம் இது தானோ?





செவ்விதழ் பூந்தேனே!
செவ்வாயில் சந்தித்தேனே !


மறுகணம் வீழ்ந்தேனே !
மறுமுறை காண ஏங்கினேனே !


மச்சவிழி பெண்ணே !
மாரீச்சன் மாய மானே !


ஆற்காட்டில் சந்தித்தேனே !
ஆர்குட்டில் தேடினேனே !


நினேத்தேன் லூசு பெண்ணே !
நிச்சயம் நீ பேஸ்புக்கில் இருப்பாயென்றுதானே !


என் காதலியை கண்டுபிடித்தேனே !
என் காதலையொரு செவ்வாயில் சொன்னேனே !


உன் 'செவ்'வாயின் சுவையறிந்தேனே !
உன் சுவையை தினமும் விரும்பினேனே !


என் அம்மாவிடம் சொன்னேனே !
உன் ஜாதகமும் கொடுத்தேனே !


ஆம் நான் 'செவ்'வாய் இனியது என்றேனே !
ஆனால் அம்மா 'செவ்வாய்' கொடியது என்றாளே !


தோஷமில்லா பெண்ணொருத்தி கண்டாளே !
தோரணநாளும் வந்தது என்பேச்சு கேளாமலே !


மணமுடித்து ஆண்டுகள் எட்டோடினவே !
மகனொருவன் ஐந்தகவை யுடனே !


மீண்டுமொரு செவ்வாயில் உன்னை கண்டேனே !
மகனொருவன் இருக்கலாமென்று எண்ணினேனே !


'செவ்'வாயில் தோஷமில்லாதவளே உனக்கு
செவ்வாய் தோஷமென்று யார் சொன்னார்களோ ?


இன்று வரை நீ கன்னியாய் 
இருப்பதன் மர்மம் இது தானோ?


திங்கள், 18 ஏப்ரல், 2011

கிரிக்கெட் கலாட்டா-1

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா












வியாழன், 14 ஏப்ரல், 2011

அன்னா அசாரே காணும் ஆண்டு

அனைவருக்கும் எனது இனிய கர வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இனிய வருடத்தினை இனிதே வரவேற்போம்.


'கர' ஆண்டு 
கறை நீக்கும் ஆண்டு

கைக் கொடுக்கும் ஆண்டு
கலக்கற ஆண்டு

வானம் பொழியும் ஆண்டு
வயல் நிறையும் ஆண்டு

விவசாயி விரும்பும் ஆண்டு
விளைச்சல் தரும் ஆண்டு

சுனாமி வாரா ஆண்டு
சுற்றம் சேர்ந்திடும் ஆண்டு

உண்மை நிலைநாட்டும் ஆண்டு
ஊழல் ஒழிக்கும் ஆண்டு

வறுமையை ஒழிக்கும் ஆண்டு
விலைவாசியை கட்டுபடுத்தும் ஆண்டு

நலம் கொடுக்கும் ஆண்டு
நேர்மை செழிக்கும் ஆண்டு

அன்பு நிறைந்த ஆண்டு
பண்பு ஊட்டிடும் ஆண்டு

அப்துல் கலாம் கண்ட ஆண்டு
அன்னா அசாரே காணும் ஆண்டு

ஏழ்மையை போக்கும் ஆண்டு
ஏழைகள் மகிழ்ந்திடும் ஆண்டு

மொத்தத்தில்

மனம் விரும்பும் ஆண்டு
மகிழ்ச்சியூட்டும் ஆண்டு.

திங்கள், 11 ஏப்ரல், 2011

உன்னால் முடியும் தம்பி !!!


ஏனோ தானோ வென்று கண்டதையும் எழுதிக் கொண்டிருந்த எனக்கு ஏனோ இவரைப் பற்றி எழுத வேண்டுமென்று தோனிற்று. நேர்மையாக வாழ்வது கடினம், அதிலும் ஊழல் யுகத்தில் நேர்மையாக வாழ்வது கடினத்திலும் கடினம் என்று தான் தோன்றுகிறது. பதிவு கொஞ்சம் நீளம் தான். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள். எனக்கு இவரைப் பற்றி படித்தவுடன் "உன்னால் முடியும் தம்பி" படம் தான் ஞாபகத்திற்கு வந்தது.




ஆரம்ப கால வாழ்க்கை

அன்னா அசாரே, மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள அகமத்நகர் எனும் நகரத்திற்கு அருகிலுள்ள பிங்கார் என்னும் சிற்றூரில் பிறந்தார்.  இவருடைய தந்தை பாபுராவ் அசாரே ஆயுர்வேத ஆசிரம பார்மஸி ஒரு சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய தாத்தா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளார். அன்னா பிறந்த பொழுது தான் பிங்காரில் பணியிலமர்த்தப் பட்டார். இவரின் தாத்தா 1945 ம் ஆண்டு இறந்துவிட்டார். ஆனாலும் அன்னாவின் தந்தை தொடர்ந்து பிங்காரிலேயே வசித்து வந்தார். 1952 ம் ஆண்டு அன்னாவின் தந்தை தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனது சொந்த கிராமமான ராலேகன் சித்திக்கு வந்தார். அப்பொழுது அன்னாவின் உடன் பிறந்தோர் 6 பேர் இருந்தனர். மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர் அன்னாவின் குடும்பத்தார். அப்பொழுது அன்னாவின் குழந்தையில்லா அத்தை தான் அன்னாவை பாம்பேவிற்கு அழைத்து சென்று அங்கு அவரை படிக்க வைத்தார். அன்னா ஏழரவது வரை படித்தார். பிறகு குடும்பத்தின் மோசமான நிதிநிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு தாதரில் பூக்களை விற்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம் குடும்பத்தை காப்பாற்றவும் உறுதுணையாகவும் இருந்தார். கொஞ்ச காலத்திற்கு பிறகு கிடைத்த அனுபவத்தினைக் கொண்டு தனியாக பூக்கடையொன்றினை தொடங்கினார். தன்னுடைய இரு சகோதரர்களையும் பாம்பேவிற்கு அழைத்துக் கொண்டார்.  சீராக கொஞ்சம் கொஞ்சமாக அன்னாவின் வருமானம் மாதம் 800 ரூபாயாக உயர்ந்தது. அந்த காலங்களில் அது ஒரு நல்ல வருமானம் தான்.


இந்திய ராணுவத்தில் அன்னா

அன்னா அசாரே இந்திய ராணுவத்தில் ஒரு டிரைவராக பணிபுரிந்தார். அப்பொழுது கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எல்லாம் சுவாமி விவேகானந்தா, மகாத்மா காந்தி மற்றும் ஆச்சாரிய வினோபா பாவே ஆகியோருடைய புத்தகங்களையெல்லாம் வாசித்தார். அதன் மூலமாகவே அவர் ஈர்க்கப் பட்டு, 1965 ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது தான் ஒரு சமூக சேவகரானார். அந்த போரில் இந்திய பாகிஸ்தான் எல்லையிலிருந்தவர்களில் தப்பித்தவர்களில் இவரும் ஒருவரே. 1970ல் ஒரு டிரக் விபத்திலிருந்து தப்பித்தவர். பிறகு இந்திய 1975 ம் ஆண்டு விருப்ப ஓய்வினை பெற்றுக் கொண்டு தனது சொந்த ஊரானா ராலேகன் சித்திக்கு வந்தார்.

இவர் தருன் மண்டல் என்றொரு இளைஞர் இயக்கத்தினை ஆரம்பித்தார்.

முதலில் சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமென தீர்மானித்தார். குடியினால் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்பதை அறிந்து கொண்டார். இந்த குடிப் பழக்கம் என்ற சாபக்கேடு இருந்தால் நிச்சயமாக கிராமம் முன்னேறாது என்று நம்பினார். அதனால் தான் முதல் பணியாக குடியை வேறறுக்க திட்டமிட்டார். (இது ஒன்னும் பாமக ராமாதாஸ் அய்யா அப்ப பிணாத்துவாரே அதை நினைச்சிக்காதீங்க...!)

அவர் தனது இளைஞர் இயக்கத்துடன் சேர்ந்து ஊர் மக்களை ஒரு கோயிலில் ஒன்று திரட்டி கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றினார்.  (இது கருணாநிதி அய்யா இயற்றுற செயற்குழு தீர்மானம் இல்லீங்கோவ்.......!)

அதன்படி ஊர் மக்கள் எல்லோரும ஒன்று சேர்ந்து சாரய ஊரல்களை அழித்தனர். ஊருக்குள்ள குடிக்க கூடாதுன்னு ஒரு கட்டுப்பாடும் விதிக்கப் பட்டது. (என்னைக்கும் தமிழ் நாட்டுல பூரண மதுவிலக்கு அமுலாகாதுங்கப்பா.....15000 கோடி ரூபாய் வருமானம் அரசாங்கம் விடுமா என்ன? அதனால தமிழ் 'குடி' மகன்கள் பயப்பட வேண்டாம்)
பிறகு ஒரு கட்டத்தில் தானாக முன் வந்து 30 சாரய உற்பத்தி செய்றவங்க தானாக முன்வந்து தன்னுடைய ஊரல் ஆலைகளை மூடிவிட்டார்கள். ஏனென்றால் இளைஞர் பட்டாளம் அவர்களுடைய சாராய ஊரல்களை அடித்து நொறுக்கிய போது அவர்களால் புகார் கூட கொடுக்க முடியவில்லை. ஏனென்றால் அவர்கள் செய்யும் தொழில் ஒன்றும் நேர்மையாக நடத்தும் அல்லவே.

இப்படியிருந்தும் ஜனங்க அவ்வளவு சீக்கிரம் திருந்திடுமா என்ன? அதே தான் அந்த ஊர்ல சில பேரு இந்த கட்டுப்பாட்டை மீறி பக்கத்து ஊரில் இருந்து சாராயத்தினை வாங்கி வந்து குடித்துக் கொண்டு தானிருந்தனர். இதனால் அசாரே என்ன செய்தார் தெரியுமா? குடிப்பவர்களுக்கு மூன்று முறை எச்சரிகை செய்யப் படும். அதன் பிறகு உடல் ரீதியான தண்டனை வழங்கப் படும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதன் படி குடித்த நிலையில் பிடிப்பட்ட 12 பேரை ஒரு கம்பத்தில் கட்டி வைத்து வெளு வெளுவென வெளுத்தனர் அந்த இளைஞர் இயக்கத்தினர்.

அப்போது அன்னா அசாரே சொன்னார்.

"ஒரு குழந்தைக்கு அம்மா ஏன் கசப்பான மருந்தை கொடுக்கிறார் என்று அந்த அம்மாவிற்கு தான் தெரியும், குழந்தைக்கு கசப்பான மருந்தைக் கொடுத்தால் தான் நோய் குணமாகுமென்றால் குழந்தைக்கு பிடிக்காவிட்டாலும் அதைக் கொடுத்து தானே ஆக வேண்டும். ஏனென்றால் அந்த குழந்தையை பாதுகாக்கும் பொறுப்பு அந்த அம்மாவுடையது தானே"

அதுபோல தான் மது அருந்திய இவர்களுக்கு கொடுக்கும் தண்டனையும், இது இவர்களுடைய குடும்பம் அழியாமலிருப்பதற்காக தான்.

அன்னா மகாராஷ்டிரா மாநில அரசிற்குஒரு கோரிக்கை வைத்தார். அதன்படி ஒரு ஊரிலுள்ள 25­% பெண்கள் ஆதரவளித்தால் அந்த ஊரில் மது விலக்கு கொண்டு வரப்பட வேண்டு மென்பமதே. அதன் படி ஜூலை 2009 ல் மாநில அரசு பாம்பே தடுப்பு சட்டம், 1949-ல் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி 25% சதவீத பெண்கள் மது விலக்கிற்கு ஆதரவாக மாநில வரித்துறைக்கு எழுத்துப்பூர்வமான மனுக்களை அளித்தால், ரகசிய வாக்கெடுப்பின் படி அந்த ஊரில் மதுவிலக்கு அமுல் படுத்தப்படும். அதே போல நடவடிக்கை வார்டு மற்றும் முனிசிபல் அளவிலும் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன் பிறகு மேலும் ஒரு திருத்தத்தை அரசு கொண்டு வந்தது. அதன்படி புதிதாக மது விற்பனை செய்ய அனுமதி அளிக்கும் போது கிராம சபையின் ஒப்புதலை கண்டிப்பாக பெறவேண்டும். இதனை அடிப்படையாக கொண்டு பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் அவர்களுக்கு எதிராக அரசு வழக்குகளை பதிவு செய்தது. இதனால் அசாரே மீண்டும் இப்பிரச்சினையை ஆகஸ்டு 2009 கையிலெடுத்தார். எனவே மாநில அரசு இப்பிரச்சினையை கைவிட்டு அவர்கள் மேல் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற்றதோடு மதுவிலக்கினையும் அமுல் படுத்தியது. மது விலக்கோடு புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளையும் தடைசெய்தது.

இதனைக் கொண்டாடும் விதமாக அந்த இளைஞர் இயக்கம் ஹோலிப் பண்டிகையை கொண்டாடியது. ஹோலி என்பது தீயவற்றைகளை எரிப்பது என்று பொருளாகும். ஆகையால் அந்த ஊரிலுள்ள எல்லா புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளையும் இளைஞர்கள் கொண்டு வந்து ஹோலி நெருப்பினைக் கொளுத்தி தீயிலிட்டு அழித்தனர். அன்றிலிருந்து அந்த ஊரில் புகையிலை, சிகரெட் மற்றும் பீடிகளை எந்த கடையிலும் விற்பதில்லை. (ஆனால் பாமக அன்புமணி சின்ன அய்யா புகையிலை, சிகரெட் மற்றும் பீடி விளம்பரங்களை தடைசெய்ததோடு பின் பக்கமா காசு வாங்கிட்டாருன்னு ஒரு பேச்சு....)


பனி பரவதா மண்டல் என்றொரு இயக்கத்தினையும் ஆரம்பித்து அதன் மூலம் நீர் விநியோக ஒன்றியத்தினை ஆரம்பித்தார்.

விவசாயத்திற்கு மிக முக்கியம் மேம்படுத்தப் பட்ட பாசன வசதியாகும் என்பதை அன்னா உணரலானார். ராலேகன் கிராமம் சின்ன மலைகளையுடையதாகும். எனவே அந்த பகுதியில் சின்ன சின்ன செக் டேம்களை கட்ட எத்தனித்தார். அதற்காக அவர் அந்த ஊரிலுள்ள தன்னார்வ தொழிலாளர்களை பயன்படுத்தி முதல் செக் டேமை கட்டினார். ஆனால் அந்த செக் டேம் லீக் ஆக ஆரம்பித்தது. பிறகு அரசாங்கமே அவருக்கு செக் டேமை கட்ட நிதியுதவி செய்தது.

அதே போன்று அந்த பகுதியில் அடிக்கடி ஏற்படும் மண்ணரிப்பை தடுக்க எத்தனித்தார். அதற்காக அவர் 3,00,000 மரக்கன்றுகளை அந்த ஊரை சுற்றிலும் மலையெங்கும் நட்டார். அதற்கு அவருக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஆம் அவரின் அந்த செக் டேம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. இப்போது அந்த பகுதியில் நல்ல நீர்வரத்தும நீராதாரமும் கிடைத்துள்ளது. சொட்டு நீர் பாசனத்தை வெற்றிக் கரகமாக செயல்படுத்தி அதன் மூலம் பப்பாளி, எலுமிச்சை, மிளகாய் பயிரிடப்பட்டு 80 ஏக்கர் அளவில் விவசாயத்தை வெற்றியடைய செய்தார். பணப்பயிரான கரும்பினை பயிரிட தடைவிதிக்கப் பட்டுள்ளது. ஏனெனில் அது அதிக நீரை எடுத்துக் கொள்ளும் என்பதால். அதற்கு பதிலாக பயிறு வகைகள் மற்றம் எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு வெற்றிக் கண்டனர். நல்ல விளைச்சலை கண்ட விவசாயிகளால் அந்த கிராமமே ஒளிர ஆரம்பித்தது. 1975லிருந்து அவர் இது வரை 70 கிராமங்களிலுள்ள விவசாயிகளுக்கு உதவியுள்ளார்.

அதேபோல கிராமங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியை பெருமளவு அதிகரிக்க செய்தார். கலப்பின மாடுகளை கால்நடை மருத்துவர்களின் உதவியோடு உருவாக்கி அதிக பால் சுரக்கும்படி செய்வித்தார்.


Sant Yadav Baba Shikshan Prasarak Mandal டிரஸ்ட்டின் மூலமாக 4,00,000 ரூபாய் அரசிடமிருந்து National Rural Education Programme (NREP) திட்டதின் மூலமாக பள்ளிக் கட்டிடம் மற்றும் புதிய ஹாஸ்டல் ஆகியவைகளை இரண்டு மாதத்தில் கட்டி 200 மாணவர்களைப் படிக்க வழிவகை செய்தார்.

தீண்டாமை ஒழிப்பு, கலப்பு திருமணம் மற்றும் கிராம சபை சட்டத் திருத்தம் ஆகியவைகளை மேற்கொண்டார்.

ஊழல் எதிர்ப்பு போராட்டம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம் ஆகியவைகளை ஏற்படுத்தி மகாரஷ்டிரா மாநில அரசிற்கு சவாலாக இருந்தார்.


லோக்பால் சட்டமாக்கலுக்கான போராட்டம்

அண்ணா அசாரேயின் 2ம் நாள் உண்ணாவிரதப் போராட்டம் 2011ஆம் ஆண்டு அன்னா அசாரே வலுவான ஊழலெதிர்ப்புக்கான லோக்பால் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட வேண்டும் என்று போராடினார். இது தொடர்பாக, முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் இவர்களுடன் ஊழலுக்கெதிரான இந்தியா என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஜன் லோக்பால் மசோதா என்ற சட்டவரைவினைத் தயாரித்துள்ளனர். இது அரசு பிரசுரித்துள்ள லோக்பால் சட்டவரைவினை விட வலுமிக்கதாகவும் அம்புட்ஸ்மன் எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்தும் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவை இந்தியப் பிரதமர் ஏற்க மறுத்துள்ளநிலையில், ஊழல் புரிந்தவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் நடுவண் "லோக்பால்" மற்றும் மாநில "லோக் ஆயுக்த்" நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கும் வகையில் வலுவான லோக்பால் சட்டவரைவினை இயற்ற அரசு பிரதிநிதிகளும் குடிமக்கள் பிரதிநிதிகளும் இணைந்த கூட்டுக்குழு ஒன்றினை அமைக்கக் கோரி ஏப்ரல் 5, 2011 அன்று தில்லியிலுள்ள ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் சாகும்வரை உண்ணாவிரப் போராட்டம் நடத்தினார். அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளார்.


அன்னா அசாரேவின் குரல்

ஊழலுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் லட்சக்கணக்கான மக்களை தன்பின்னால் அணிவகுக்கச்செய்த காந்தியவாதி அன்னா ஹசாரே, தேர்தலில் நின்றால் ஜெயிப்பாரா?

'ம்ஹூம்... டெபாஸிட் கூட கிடைக்காது' என்கிறார் ஹஸாரே.

டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அன்னா ஹஸாரே. அப்போது அரசியலில் ஈடுபட விருப்பமா என்று கேட்டனர்.

இதற்கு பதிலளிக்கையில், "எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பிரதமராகும் விருப்பமும் இல்லை.

நான் தேர்தலில் போட்டியிட்டால் டெபாசிட் தொகை கூட கிடைக்காது. ஏனென்றால் எனக்கு பணபலம் இல்லை. வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை 100 ரூபாய் பணத்துக்காகவும், மது பாட்டிலுக்காகவும் விற்கும் நிலை உள்ளது. இன்றைக்கு ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டும் என்றால் ரூ 6 முதல் 7 கோடி வரை தேவை," என்றார்.

நேர்மையான எம்.பி.க்கள் உங்களை பிரதமராக தேர்ந்து எடுத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டபோது, "நான் அரசியலில் நுழைந்து பிரதமராகும் நிலை ஏற்பட்டால், நான் தற்போது செய்து கொண்டு இருப்பதை, அரசின் அங்கம் என்ற முறையில் செய்ய முடியாது. அரசியலில் இறங்குவது குறித்து ஒருபோதும் நான் நினைத்தது இல்லை," என்று அவர் பதில் அளித்தார்.

மகாத்மா காந்தி அல்லது ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்டதற்கு, "மகாத்மா செய்தது மிகப் பெரிய சாதனை. நான் அவரைப் பின்பற்ற முயல்கிறேன். அவரோடு யாரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. மகாத்மா பெரும் அறிவாளி, மெத்தப் படித்தவர். நான் பெரிதாக படிக்கவுமில்லை. தேசத்தின் தந்தையான அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம்", என்றார்.

மொத்தத்தில் இவர் ஒரு உன்னால் முடியும் தம்பி !!! ஆம் சில எளிய செயல்களை ஒழுங்காக செய்தால் பின்னாளில் அதுவே வியத்தகு சாதனைகளாக மாறிவிடும்.

வியாழன், 7 ஏப்ரல், 2011

என் ஏக்கத்தினை சொல்லலாமன்றோ?






என் பாட்டுக்கு மெட்டு போட்டுக் கொள்ளென 
தோன்றிய கவிஞர்கள் போய்


மெட்டுக்கு பாட்டெழுதும் கவிஞர்கள் வந்தனர் 
இவர்கள் போய் அடுத்து


துட்டுக்கு பாட்டெழுதும் கவிஞர்கள் வந்தனர்
இவர்கள் போய் இன்று


குத்துக்கு பாட்டெழுதும் கவிஞர்கள் வந்தனர்
இவர்கள் போய் நாளை??


ஏ சமுதாயமே! நீ விரும்பியதால் தான் 
இந்த மாற்றம் உண்டாயிற்றோ??


பாட்டுக்கு மெட்டமைத்தப் போதும்
நன்றாகத் தான் இருந்தது 


மெட்டுக்கு பாட்டமைத்த போதும்  
நன்றாகத் தான் இருந்தது - ஏன்


துட்டுக்கு பாட்டமைத்த போதும் கூட பாட்டு
நன்றாகத் தான் இருந்தது - ஆனால் இன்று


குத்துக்கு பாட்டு ஏனோ சகிக்கவில்லையே?? 


பாரதியுடனும், பாரதிதாசனுடமே எழுச்சி,
புரட்சி கவிதைகள் முடிந்தனவோ??


அது சரி நான் என்ன பரம்பறை கவிஞானா ?
கவிஞர்களை குறை சொல்ல!


ஆனால் நான் ரசிகன் ஆயிற்றே!
என் ஏக்கத்தினை சொல்லலாமன்றோ?

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

பீரையும் பேஸ்புக்கையும்...


நிழல்கள் உயிர்ப் பெற்று விட்டால்
        நிஜங்கள் செத்து விடுமோ?
                 ஊழல்கள் தலைவிரித்து நடனமாடினால்
                          உண்மை உறங்கி விடுமோ?


காமம் கட்டவிழ்த்து விடப்பட்டால்
       காவியும் காமமாகுமோ?


கதிர்வீச்னைப் பற்றி யாரும்
       கவலைப் பட்டதாய் தெரியவில்லை
               அணுக்கருவைப் பிளந்த நாம் அக்கதிர் 
                                                                            வீச்சாலேயே
                        சிசுக்கருவை அழிக்க துணிந்ததேனோ?


புதியதோர் உலகைக் காண
        பூமிக்கு வரும் புதிய உயிர்க்கு நாம்
                பீரையும் பேஸ்புக்கையும் 
                       தான் விட்டு செல்வோமோ?


நேற்று போல் இன்று இல்லை
          என்று கூறும் நம் தாத்தாக்களைப்
                  போன்று நாமும் நாளைய சமுதாயத்தை
                            எப்படி சந்திக்கப் போகின்றோமோ?


பாசவலைகள் கலைந்து இன்று இணைய
        வலைக்குள் அடைபட்டிருக்கும் நாம்
                 அன்பின் மதிப்பினை அடுத்த
                         தலைமுறைக்கு உணர்த்த 
                                                             மறந்திடுவோமோ?


பொய், ஊழல், காமம், பண்பின்மை, 
          கர்வம், பகட்டு, ஆணவம், லஞ்சம்
                இன்னபிற தீயவற்றை நேசிக்கின்ற 
                     இன்றைய சமுதாயத்தில் எவரேனும் 
                                                                     நேர்மையுடன்

கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தால் 
          அவரை ஏளனத்துடன் இலக்காரத்துடனும்
                  பார்க்கும் ஏ...இன்றைய சமுதாயமே..!
                         நாளை நீ என்ன செய்யப் போகிறாய்???

புள்ளக் குட்டிங்கள படிக்க வையுங்க....


செய்தி:
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம், காவல் துறையுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் அதிரடிச் சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஒரு டீக்கடையில் இருந்து தேர்தல் அதிகாரிகள் ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர். 
ஆ‌ம்‌னி பேரு‌ந்‌தி‌ன் மே‌ற்கூரை‌யி‌ல் உ‌ள்ள 5 பைக‌ளி‌ல் 1000 ரூபா‌ய் நோ‌ட்டு‌க்க‌ட்டுக‌ள் இரு‌‌ந்தது. இதில், மொ‌த்த‌ம் 5 கோடியே 11 ல‌ட்ச‌த்து 27 ஆ‌யிர‌‌‌ம் ரூபா‌ய்‌ கண்டுபடிக்கப்பட்டது. இதற்கான உ‌ரிய ஆவண‌ம் இ‌ல்லாததா‌ல் பண‌த்தையு‌ம், பேரு‌ந்தையு‌ம் அ‌திகா‌ரிகள‌் ப‌றிமுத‌ல் செ‌ய்தன‌ர். வாகன சோதனை‌யி‌ல் ஒரே நேர‌த்‌தி‌ல் 5 கோடி ரூபா‌ய்‌க்கு மே‌ல் பண‌ம் கை‌ப்ப‌ற்ற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது இதுவே முத‌ன் முறை என்பது குறிப்பிடதக்கது.


ஏனோ தானோ: 
கந்தசாமி படம் பார்த்து இதை செஞ்சிருப்பாங்களோ??? அப்ப மூமைத்கான்?? இருந்தாலும் டீ கடையில பணப்பட்டுவாடா எல்லாம் புதுசா தான் இருக்கு....


செய்தி:
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, அவருடன் தனக்கு பிரச்சினை இருந்ததாக டாடா கூறியுள்ளார்.


ஏனோ தானோ: 
எலி சிங்கத்தை மிரட்டிப் பார்த்துச்சாம்.. பின்ன சிங்கத்துக்கு கோபம் வராதா என்ன? "டாடா" அண்ணே! எதுக்கும் இன்னொரு தடவை நீரா ராடியாகிட்ட சொல்லி வைங்க... பயபுள்ள மீண்டும் அமைச்சராகி உங்கள மிரட்ட போகுது..


செய்தி:
கூட்டணி அமைத்தாலும் இதுவரை ஒரே மேடையில் ஏறி பிரச்சாரம் செய்வதைத் தவிர்த்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தேமுதிக தலைவர் விஜய்காந்தும் நாளை கோவையில் ஒரே இடத்தில் கூட்டாக பிரச்சாரம் செய்ய உள்ளனர்.


ஏனோ தானோ: 
சினிமாவில் தான் ஒன்னா நடிக்கற வாய்ப்பு இல்லை. மேடையிலாவது ஒன்னா நடிக்கலாம்னா விடமாட்டாங்க போல!!!
எதிர் கட்சிகள் எழுப்பிய கேள்விகளை தொடர்ந்து இந்த நாடகத்திற்கு கதை, திரைக்கதை வசனம் எழுதியவர் யாருங்க.. எல்லாம் நம்ம சோ சார் தான்...


செய்தி:
முதல்வர் சுற்றுப்பயணம் செல்லும்போதோ, பொதுக் கூட்டங்களுக்குச் செல்லும்போதோ கெசட்டட் அதிகாரிகள் யாரும் உடன் செல்லக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து முதல்வருடன் இருப்பதற்கு இடையூறாய் இருந்த செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் சண்முகநாதன்.


ஏனோ தானோ: 
அரசிற்காக (தாத்தாவிற்காக) தன் கவர்மெண்ட் உத்யோகத்தினை கூட கடைசியாக நம்ம சண்முகநாதன் துறந்திட்டாரு?? 
ஆமாம் ஆமாம் வேலையை விட முடியாதுன்னு சொன்னா (முன்னே ஒரு வாட்டி நம்ம சண்முகநாதன் தாத்தாவை விட்டு பிரிந்து போயிருந்தப்போ.. நம்ம தாத்தா "அவன்  வராறான்னா இல்லையான்னு கேளுய்யா...இல்லைன்னா பைலை திருடிட்டு போயிட்டான்னு அவன் மேல ஒரு பொய் கேஸை போட்டு உள்ள தள்ளிடுவேன்னு சொல்லு) அப்படி சொன்னதை அதுக்குள்ளய்யா நம்ம சண்முகநாதன் மறந்திருப்பாரா என்ன?"




செய்தி:
அதிக கமிசன் தருவதாக கூறி, மாருதி உள்ளிட்ட உள்நாட்டு கார் நிறுவனங்களின் டீலர்களுக்கு வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் வலைவீசி வருகின்றன. நாட்டின் மாநகரங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள பெரிய டீலர்களுக்கு அதிக கமிசன் தருவதாகவும், கார்களுக்கு பணம் திரும்ப செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடித்து தருவதாக ஆசை வார்த்தை கூறுவதால், டீலர்களும் பன்னாட்டு நிறுவனங்கள் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.


ஏனோ தானோ: 
இப்படி வெளி நாட்டுக்காரன் போடற எலும்பு துண்டுகளுக்கு நாம அலையறது 200 வருஷமா நடக்கிறது. எவன் செத்தா என்ன? எவன் வாழ்ந்தா என்ன? நாம நல்லா இருக்கணும் அதான் நம்ம பாலிசி !


செய்தி:
பாவம், உங்க ஊர் பையண்ணே என்று விஜயகாந்த்திடம் வடிவேலுவை அறிமுகப்படுத்தி அவருடன் நடிக்க வைத்தேன்.ஆனால் இன்று வளர்த்து விட்ட ஏணியை எட்டி உதைத்துள்ளார் வடிவேலு என்று சாடியுள்ளார் இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார்.


ஏனோ தானோ: 
அன்னைக்கு விஜயகாந்த்தோட நடிச்சேன்னு பெருமைப்பட்டேன்.. இன்னைக்கு விஜயகாந்த்தை எதிர்த்தேன்னு பெருமைபடறேன்...அவ்வளவு தான்.. அன்னைக்கு உங்க நேரம் நல்லாயிருந்தது! நான் வந்து உங்க கிட்ட சான்ஸ் கேட்டேன். ஆனால் இன்னைக்கு என் நேரம் நல்லாயிருக்கு! நீங்க வந்து எங்கிட்ட சான்ஸ் கேட்டாலும் நான் கொடுக்க மாட்டேன்.. இப்ப நீங்க ஒரு டம்மி பீஸ்சு....


ஏனோ தானோ: 


போங்க சார் போங்க.. போயி உங்க புள்ளக் குட்டிங்கள படிக்க வையுங்க....

ஜோதிடரை கூப்பிடுப்பா....



நிகழ்வு:
சாமி கூறுகையில், விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. குடிக்காவிட்டால் அவரால் பேச முடியாது. அவர் ஒரு ஜானிவாக்கர்.
பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். அவருக்குப் பேசாமல் முரசு சின்னத்திற்குப் பதில் பாட்டில் சின்னத்தைக் கொடுத்திருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சுப்ரமணியம் சாமி.


ஏனோ தானோ: 
இந்த மனுஷனுக்கு அப்ப அப்ப சிறு மூளை வேலை செய்யுதுப்பா....


நிகழ்வு:
சின்ன கவுண்டர்ல கேப்டனுக்கு கால் அமுக்கி விட்டவர் வடிவேலு. நாங்க செஞ்ச பாவம், ஒண்ணும் தெரியாத வடிவேலுவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது தான். விஜயகாந்த்தை திட்ட உனக்கு எந்த தகுதியும் கிடையாது. திருமாவளவனும், ராமதாசும் குஷ்புவை தமிழகத்த விட்டே விரட்டணும்ன்னு சொன்னாங்க. இப்ப அவங்களே ஓட்டு கேட்க சொல்றாங்க என்றார் சிங்கமுத்து.


ஏனோ தானோ: 
அதே சின்ன கவுண்டர்ல சுகன்யா தொப்புல்ல பம்பரம் விட்டவர் தானே இந்த விஜயகாந்த்.... அது இருக்கட்டும் சிங்கமுத்து அண்ணே ... நீங்க ஒரு நடிகர்ன்னு வெளியே தெரிய ஆரம்பித்ததே வடிவேலுவோட நடிக்க ஆரம்பித்த பிறகு தான்.. ஆனா இன்னைக்கு நீங்க என்ன பண்ணுறீங்க???


நிகழ்வு:
"காமராஜர் இறந்த போது அவரிடம் இருந்தது நான்கு கதர் வேட்டி, சட்டை, 350 ரூபாய் மட்டுமே. இன்று அமைச்சர்களின் சொத்து பல கோடி ரூபாய்,'' என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.


ஏனோ தானோ: 
தாத்தா சாகும் போது பாருங்க... சும்மா ஏனோ தானோன்னு பல லட்சம் கோடிகள் தான் அவர் குடும்பத்தோட சொத்தா இருக்கும்... 


நிகழ்வு:
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.


ஏனோ தானோ:
கோபம் நியாமாத்தான் தெரியுது... பாவம்ப்பா அவங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க....


நிகழ்வு:
இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை மறைமுகமாகக் குறி்ப்பிட்டார் முதல்வர் கருணாநிதி 


ஏனோ தானோ:
எங்களுக்கு பலாக்காய் கிடைக்காது... அதனால் கலாக்காயை தேடுகிறோம். எனக்கு பதவி வேணும்னா எவ்வளவு கீழ வேணும்னானும் இறங்குன்னு உங்களுக்கு தெரியாதா???. 


நிகழ்வு:
உலகிலேயே பணக்கார குடும்பம் இன்றைக்கு கருணாநிதி குடும்பம்தான். அவர்கள் குபேரர்களாக மாறியிருப்பதன் ரகசியம் என்ன என்பதை மக்கள் உணர வேண்டும். கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு திமுகவும், அது சார்ந்த கட்சிகளும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. 


ஏனோ தானோ:
உண்மையை ஒரு பக்கம் சொன்னாலும்.. இன்னொரு பக்கம் இந்தம்மாவுக்கு தான் என்னா ஒரு கொலைவெறி????


நிகழ்வு:
மீண்டும் உடைந்தது யுவன் - செல்வராகவன் கூட்டணி!! செல்வராகவனின் அடுத்த படமான இரண்டாம் உலகத்திலிருந்து வெளியேறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இப்போது ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.


ஏனோ தானோ:
டிவிட்டர்ன்னு ஒன்னு இருக்கறது எவ்வளவு வசதியா இருக்கு... மாத்தி திட்டிக்கறதுக்கு... பலே பலே இரண்டு பேருக்கும் பாலம் கட்டிதான் ஒன்னு சேர்க்கணும் போல...





நிகழ்வு:
பாராளுமன்ற நிலைக் குழு முன்பாக சாட்சியம் அளித்த ரத்தன் டாடா, அந்தக் கடிதத்தை தான் எழுதியது உண்மை என்றும், சீலிடப்பட்ட உறையில், நீரா ராடியாவிடம் கொடுத்தனுப்பியது தான்தான் என்றும், சீலிடப்பட்ட உறையில் அளித்த கடிதம், எப்படி வெளியானது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார். 


ஏனோ தானோ:
தாத்தா அந்த மாதிரி கடிதமே தன்னிடம் யாரும் தரவில்லை எனக் கூறியிருந்தார். இப்போது அது பச்சைப் பொய் என்று உலகத்திற்கே தெரிந்து விட்டது. எனக்கு நேரம் சரியில்லையோ... எங்கப்பா நம்ம ஆஸ்தானா ஜோதிடரு? அவரை கூப்பிடு... இன்னைக்கு பார்த்துடலாம்... அவர் நாக்குல சனியா? இல்ல நம்ம நாக்குல சனியா??


நிகழ்வு:
அழகிரி, எப்படியாவது, சகாயத்தை மாற்ற வேண்டுமென்று, கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார்.  முதல் கட்டமாக, தலைமைச் செயலாளர் மற்றும், திமுகவின் மகளிர் அணித் தலைவர் மாலதியிடம் சகாயத்தை மாற்ற வேண்டும் என்று புகார் ஒன்று கொடுத்தார்.  
இதற்கு ஒத்து ஊதும் வகையில், மதுரை கிழக்கு பகுதியின் தேர்தல் அதிகாரியாக பணி புரியும், சுகுமாறன் என்ற அதிகாரியை விட்டு, சகாயம் மீது பொய்ப் புகார் கொடுக்கச் செய்தார்.  சுகுமாறன் தனது புகாரில், சகாயம், அழகிரி மீது பொய் வழக்கு பதியச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், அதனால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறும் கோரியிருந்தார்,


ஏனோ தானோ: 
என்னத்தை சொல்ற இந்த அஞ்சா நெஞ்சன் சகாயத்தைக் கண்டு அஞ்சி ஓடறதை...இதுல மூளை வேற இல்ல...தமிழக அரசு தலைமை செயலாளர்கிட்ட போய் புகார் கொடுத்து என்னத்த பண்ண?? பாவம் அந்த சுகுமாறன் பணியிடை நீக்கம் ஆனது தான் மிச்சம்!!!


ஏனோ தானோ: 
ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவங்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருதோ???



திங்கள், 4 ஏப்ரல், 2011

ஒரு முழம் குறையுது!


கேள்வி:  
பைனலில் அஸ்வினை போடாம ஸ்ரீசாந்தை ஏன் போட்டீங்க?


பதில்: 

கேள்வி:

பதில்: 


கேள்வி:
"அய்யா நான் தான் வேட்பாளர்" 
என்னையே அடிச்சிட்டீங்களே....

பதில்:  


கேள்வி:
2015 உலகக் கோப்பை போட்டியிலும் சச்சின் பங்கேற்பாரா? 


பதில்: 
என் மகன் அர்ஜுன் அப்ப விளையாட வந்துட்டா நானும் கண்டிப்பா விளையாடுவேன்.......


கேள்வி:
பாகிஸ்தானியர்களுக்கு இருப்பதைப் போன்ற பெரிய மனது இந்தியர்களுக்குக் கிடையாது. என்னைப் பொறுத்தவரை, பாகிஸ்தானியர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் உள்ளதைப் போன்ற அகண்ட மனது, இந்தியர்களுக்குக் கிடையாது. இந்தியர்களுக்கு பெருந்தன்மையான மனசு கிடையாது-சொல்கிறார் அப்ரிதி


பதில்: 
ஆமாம் ஆமாம் எங்களுக்கு பெரிய மனசேக் கிடையாது.... இல்லைன்னா சயித் அன்வர் சென்னையில 194 அடிச்சப்ப நாங்க கிரிக்கெட்ட கிரிக்கெட்டா பார்த்து தான் பாராட்டுனுனோம்.... அத இன்னமும் உலகமே பாராட்டுது.... இப்படி உங்களை மாதிரி இரட்டை வேஷம் போடறது... மத சாயம் பூசறது இதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்கோ....


கேள்வி:
சூடு பிடிக்கும் கிரிக்கெட் ஜூரம்-காசு பார்க்கத் தயாராகும் ஐபிஎல் விளம்பரதாரர்கள்


பதில்: 
இனிமே தான் கச்சேரி பாருங்க.... பாருங்க .... பாத்துக்கிட்டே இருங்க... என்னைக்கு ஐபிஎல் உருவாச்சோ அன்னைக்கே கிரிக்கெட்டுக்கு அழிவுக்காலம் தொடங்கிடுச்சி...


கேள்வி:
கேப்டன் என்றால் டோணி மட்டுமே-விஜயகாந்த் இனி பேசப்படாது-வடிவேலு


பதில்: 
கைப்புள்ளன்னா அது நான் மட்டும் தான்..... இப்படி மற்ற அல்லக்கைகளை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இப்ப நான் தான் தி.மு.க. வில்ல நம்பர் ஒன் அல்லக் கைப்புள்ள......


கேள்வி:
“கம்பு என்னையே தாக்குவதா ? அதிகாரிகளை சொல்கிறேன். போலீஸ் அதிகாரிகளை கூறுகிறேன். நான் ஆட்சிக்கு வந்தபோது போலீஸ் இலாகாவில் மாதம் ரூ.80 சம்பளம் பெற்று வந்தனர்.
இந்த நிலைமாறி இன்றைக்கு எத்தனை ஆயிரங்கள் பெறுகிறார்கள். எங்களை பார்த்து அவர்கள் கம்பை தூக்குகிறார்கள். எங்கள் கார் வழியை மறிக்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து உள்ளே வரவும், வெளியே வரவும் எங்களிடம் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவதை எண்ணிப்பார்க்க வேண்டும்.


பதில்: 
 71ல் 45 ஆயிரம் பணம் இல்லாமல் கடன் வாங்கிய தாத்தா இன்று 47 கோடி சொத்து இருக்கிறது என்று வெட்கமில்லாமல் கணக்குக் காட்டவில்லையா ?


கேள்வி:
தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை போன்ற சூழல் நிலவுவதாகவும், தமிழகத்தை ஆட்சி செய்வது தனது தலைமையிலான தி.மு.க.தானா இல்லை வேறு யாராவதா என்று தெரியவில்லை என்றும் முதல்வர் பேசியிருப்பது


பதில்: 
நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருப்பது உண்மை. அது யாருக்கு என்பதுதான் கேள்வி...ஆமாம், எங்களால் பணப்பட்டுவாடா செய்ய முடியவில்லை. பாவம்ப்பா தி.மு.க. வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொள்கிறது. அய்யோ....அய்யோ....


கேள்வி:
இந்த தேர்தலில் தி.மு.கழகத்தை வீழ்த்திவிட பல முனைகளிலும், எல்லா வகையான உபாயங்களிலும், எதிர் அணியினரால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்றுகூட கருத்துக்கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள். கருத்துக்கணிப்புகளின் லட்சணம் என்னவென்று நமக்கு தெரியும். முன்புகூட கருத்துக் கணிப்பு வெளியிட்டார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தி.மு.க. கூட்டணிக்கு, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்கள் கூட கிடைக்காது என்றுதான் கணித்தார்கள். எனக்கு தெரியும், எப்போதும் எந்தெந்த கருத்துக்கணிப்பாளர்கள், இந்த தேர்தலிலே, இந்த புள்ளி விவரங்களை சொல்லி, கருத்துக்கணிப்பு வெளியிடுகிறார்கள் என்று எனக்கு தெரியும். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுடைய பெயர்களையெல்லாம் நான் வெளியிட தயாராக இருக்கிறேன் -கருணாநிதி


பதில்: 
இந்த மாதிரி ஒரு கருத்துக் கணிப்பு தினகரன் வெளியிட்டப்ப தான் ஒரு 3 பேரை கொன்னோம்.. இப்ப மீண்டும் அழகிரிக்கு வேலை வந்துடுமோ??


கேள்வி:
விஜயகாந்த் லேட்டஸ்டாக அவங்களுக்கு ஆப்படிக்க, ஆஃப் அடிச்சாதான் சரியா வரும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


பதில்: 
விடுங்கப்பா இதைப் போய் பெருசு படுத்திக்கிட்டு....ஏனோ தானோன்னு மப்புல சொல்லிட்டாரு.....


டிஸ்கி: இதெல்லாம்..ஏனோ தானோ பதில்கள் எதுவுமே நம்ம சீரியஸா எடுத்துக்க கூடாது....

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

121 கோடி வாழ்த்துக்கள்!!!


பாகிஸ்தானுடனா அரையிறுதிக்கு முன்


பாகிஸ்தானுடனா அரையிறுதிக்கு பின்



இறுதிப் போட்டியில்...





வெற்றிப் பெற்ற இந்திய அணிக்கு 121கோடி வாழ்த்துக்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...