செவ்விதழ் பூந்தேனே!
செவ்வாயில் சந்தித்தேனே !
மறுகணம் வீழ்ந்தேனே !
மறுமுறை காண ஏங்கினேனே !
மச்சவிழி பெண்ணே !
மாரீச்சன் மாய மானே !
ஆற்காட்டில் சந்தித்தேனே !
ஆர்குட்டில் தேடினேனே !
நினேத்தேன் லூசு பெண்ணே !
நிச்சயம் நீ பேஸ்புக்கில் இருப்பாயென்றுதானே !
என் காதலியை கண்டுபிடித்தேனே !
என் காதலையொரு செவ்வாயில் சொன்னேனே !
உன் 'செவ்'வாயின் சுவையறிந்தேனே !
உன் சுவையை தினமும் விரும்பினேனே !
என் அம்மாவிடம் சொன்னேனே !
உன் ஜாதகமும் கொடுத்தேனே !
ஆம் நான் 'செவ்'வாய் இனியது என்றேனே !
ஆனால் அம்மா 'செவ்வாய்' கொடியது என்றாளே !
தோஷமில்லா பெண்ணொருத்தி கண்டாளே !
தோரணநாளும் வந்தது என்பேச்சு கேளாமலே !
மணமுடித்து ஆண்டுகள் எட்டோடினவே !
மகனொருவன் ஐந்தகவை யுடனே !
மீண்டுமொரு செவ்வாயில் உன்னை கண்டேனே !
மகனொருவன் இருக்கலாமென்று எண்ணினேனே !
'செவ்'வாயில் தோஷமில்லாதவளே உனக்கு
செவ்வாய் தோஷமென்று யார் சொன்னார்களோ ?
இன்று வரை நீ கன்னியாய்
இருப்பதன் மர்மம் இது தானோ?

நெருடல் கவிதை
பதிலளிநீக்கும்.. சூப்பர்..
பாராட்டுக்கள் அருமையான கவிதை
பதிலளிநீக்குமிக்க நன்றி சௌந்தர்.
பதிலளிநீக்கு@ தமிழ்த்தோட்டம்
பதிலளிநீக்கு//பாராட்டுக்கள் அருமையான கவிதை//
மிக்க நன்றி!