நிழல்கள் உயிர்ப் பெற்று விட்டால்
நிஜங்கள் செத்து விடுமோ?
ஊழல்கள் தலைவிரித்து நடனமாடினால்
உண்மை உறங்கி விடுமோ?
காமம் கட்டவிழ்த்து விடப்பட்டால்
காவியும் காமமாகுமோ?
கதிர்வீச்னைப் பற்றி யாரும்
கவலைப் பட்டதாய் தெரியவில்லை
அணுக்கருவைப் பிளந்த நாம் அக்கதிர்
வீச்சாலேயே
சிசுக்கருவை அழிக்க துணிந்ததேனோ?
புதியதோர் உலகைக் காண
பூமிக்கு வரும் புதிய உயிர்க்கு நாம்
பீரையும் பேஸ்புக்கையும்
தான் விட்டு செல்வோமோ?
நேற்று போல் இன்று இல்லை
என்று கூறும் நம் தாத்தாக்களைப்
போன்று நாமும் நாளைய சமுதாயத்தை
எப்படி சந்திக்கப் போகின்றோமோ?
பாசவலைகள் கலைந்து இன்று இணைய
வலைக்குள் அடைபட்டிருக்கும் நாம்
அன்பின் மதிப்பினை அடுத்த
தலைமுறைக்கு உணர்த்த
மறந்திடுவோமோ?
பொய், ஊழல், காமம், பண்பின்மை,
கர்வம், பகட்டு, ஆணவம், லஞ்சம்
இன்னபிற தீயவற்றை நேசிக்கின்ற
இன்றைய சமுதாயத்தில் எவரேனும்
நேர்மையுடன்
கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தால்
அவரை ஏளனத்துடன் இலக்காரத்துடனும்
பார்க்கும் ஏ...இன்றைய சமுதாயமே..!
நாளை நீ என்ன செய்யப் போகிறாய்???

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நீங்க ஏனோ தானோன்னு கருத்தை சொல்லுங்க....ஆனா பதில் ஏனோ தானோன்னு இருக்காதுங்க....
உங்கள் பொன்னான கருத்துக்களை எப்பொழுதும் ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறேன்.