நிகழ்வு:
சாமி கூறுகையில், விஜயகாந்த் பேசுவது யாருக்கும் புரியவில்லை. குடிக்காவிட்டால் அவரால் பேச முடியாது. அவர் ஒரு ஜானிவாக்கர்.
பொது இடங்களில் அவர் அநாகரீகமாக நடந்து கொள்கிறார். அவருக்குப் பேசாமல் முரசு சின்னத்திற்குப் பதில் பாட்டில் சின்னத்தைக் கொடுத்திருக்கலாம். அதை தேர்தல் ஆணையம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் சுப்ரமணியம் சாமி.
ஏனோ தானோ:
இந்த மனுஷனுக்கு அப்ப அப்ப சிறு மூளை வேலை செய்யுதுப்பா....
நிகழ்வு:
சின்ன கவுண்டர்ல கேப்டனுக்கு கால் அமுக்கி விட்டவர் வடிவேலு. நாங்க செஞ்ச பாவம், ஒண்ணும் தெரியாத வடிவேலுவுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தது தான். விஜயகாந்த்தை திட்ட உனக்கு எந்த தகுதியும் கிடையாது. திருமாவளவனும், ராமதாசும் குஷ்புவை தமிழகத்த விட்டே விரட்டணும்ன்னு சொன்னாங்க. இப்ப அவங்களே ஓட்டு கேட்க சொல்றாங்க என்றார் சிங்கமுத்து.
ஏனோ தானோ:
அதே சின்ன கவுண்டர்ல சுகன்யா தொப்புல்ல பம்பரம் விட்டவர் தானே இந்த விஜயகாந்த்.... அது இருக்கட்டும் சிங்கமுத்து அண்ணே ... நீங்க ஒரு நடிகர்ன்னு வெளியே தெரிய ஆரம்பித்ததே வடிவேலுவோட நடிக்க ஆரம்பித்த பிறகு தான்.. ஆனா இன்னைக்கு நீங்க என்ன பண்ணுறீங்க???
நிகழ்வு:
"காமராஜர் இறந்த போது அவரிடம் இருந்தது நான்கு கதர் வேட்டி, சட்டை, 350 ரூபாய் மட்டுமே. இன்று அமைச்சர்களின் சொத்து பல கோடி ரூபாய்,'' என, தே.மு.தி.க., கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார்.
ஏனோ தானோ:
தாத்தா சாகும் போது பாருங்க... சும்மா ஏனோ தானோன்னு பல லட்சம் கோடிகள் தான் அவர் குடும்பத்தோட சொத்தா இருக்கும்...
நிகழ்வு:
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து 2015ம் ஆண்டு நடத்தவுள்ள 11வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மட்டுமே பங்கேற்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறியிருப்பதற்கு அயர்லாந்து கடும் ஆட்சேபனையும், கோபத்தையும் தெரிவித்துள்ளது.
ஏனோ தானோ:
கோபம் நியாமாத்தான் தெரியுது... பாவம்ப்பா அவங்களுக்கும் வாய்ப்பு கொடுங்க....
நிகழ்வு:
இந்தத் தேர்தலில் போதுமான இடங்களில் வெற்றி கிடைக்காவிட்டால் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை மறைமுகமாகக் குறி்ப்பிட்டார் முதல்வர் கருணாநிதி
ஏனோ தானோ:
எங்களுக்கு பலாக்காய் கிடைக்காது... அதனால் கலாக்காயை தேடுகிறோம். எனக்கு பதவி வேணும்னா எவ்வளவு கீழ வேணும்னானும் இறங்குன்னு உங்களுக்கு தெரியாதா???.
நிகழ்வு:
உலகிலேயே பணக்கார குடும்பம் இன்றைக்கு கருணாநிதி குடும்பம்தான். அவர்கள் குபேரர்களாக மாறியிருப்பதன் ரகசியம் என்ன என்பதை மக்கள் உணர வேண்டும். கின்னஸ் சாதனை படைக்கும் அளவுக்கு திமுகவும், அது சார்ந்த கட்சிகளும் டெபாசிட் இழக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஏனோ தானோ:
உண்மையை ஒரு பக்கம் சொன்னாலும்.. இன்னொரு பக்கம் இந்தம்மாவுக்கு தான் என்னா ஒரு கொலைவெறி????
நிகழ்வு:
மீண்டும் உடைந்தது யுவன் - செல்வராகவன் கூட்டணி!! செல்வராகவனின் அடுத்த படமான இரண்டாம் உலகத்திலிருந்து வெளியேறினார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இப்போது ஜீ வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
ஏனோ தானோ:
டிவிட்டர்ன்னு ஒன்னு இருக்கறது எவ்வளவு வசதியா இருக்கு... மாத்தி திட்டிக்கறதுக்கு... பலே பலே இரண்டு பேருக்கும் பாலம் கட்டிதான் ஒன்னு சேர்க்கணும் போல...
நிகழ்வு:
பாராளுமன்ற நிலைக் குழு முன்பாக சாட்சியம் அளித்த ரத்தன் டாடா, அந்தக் கடிதத்தை தான் எழுதியது உண்மை என்றும், சீலிடப்பட்ட உறையில், நீரா ராடியாவிடம் கொடுத்தனுப்பியது தான்தான் என்றும், சீலிடப்பட்ட உறையில் அளித்த கடிதம், எப்படி வெளியானது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.
ஏனோ தானோ:
தாத்தா அந்த மாதிரி கடிதமே தன்னிடம் யாரும் தரவில்லை எனக் கூறியிருந்தார். இப்போது அது பச்சைப் பொய் என்று உலகத்திற்கே தெரிந்து விட்டது. எனக்கு நேரம் சரியில்லையோ... எங்கப்பா நம்ம ஆஸ்தானா ஜோதிடரு? அவரை கூப்பிடு... இன்னைக்கு பார்த்துடலாம்... அவர் நாக்குல சனியா? இல்ல நம்ம நாக்குல சனியா??
நிகழ்வு:
அழகிரி, எப்படியாவது, சகாயத்தை மாற்ற வேண்டுமென்று, கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார். முதல் கட்டமாக, தலைமைச் செயலாளர் மற்றும், திமுகவின் மகளிர் அணித் தலைவர் மாலதியிடம் சகாயத்தை மாற்ற வேண்டும் என்று புகார் ஒன்று கொடுத்தார்.
இதற்கு ஒத்து ஊதும் வகையில், மதுரை கிழக்கு பகுதியின் தேர்தல் அதிகாரியாக பணி புரியும், சுகுமாறன் என்ற அதிகாரியை விட்டு, சகாயம் மீது பொய்ப் புகார் கொடுக்கச் செய்தார். சுகுமாறன் தனது புகாரில், சகாயம், அழகிரி மீது பொய் வழக்கு பதியச் சொல்லி தன்னை வற்புறுத்துவதாகவும், அதனால் தன்னை பணியிலிருந்து விடுவிக்குமாறும் கோரியிருந்தார்,
ஏனோ தானோ:
என்னத்தை சொல்ற இந்த அஞ்சா நெஞ்சன் சகாயத்தைக் கண்டு அஞ்சி ஓடறதை...இதுல மூளை வேற இல்ல...தமிழக அரசு தலைமை செயலாளர்கிட்ட போய் புகார் கொடுத்து என்னத்த பண்ண?? பாவம் அந்த சுகுமாறன் பணியிடை நீக்கம் ஆனது தான் மிச்சம்!!!
ஏனோ தானோ:
ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவங்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருதோ???
